அம்மாவைக் கொண்டாடுவோம்…..

வணக்கம் வாசக நெஞ்சங்களே…
உலகம் ஜனன தினம் இன்று நீங்கள் எல்லாம் அந்த சுயநலமற்ற ஜீவன் இன்றி இந்த பூவுலகத்தில் அவதரித்திருக்க முடியாது.அதிகாலையில் எழுந்து தன்னை சோடிக்காமல் உங்களை எல்லாம் ‘எழும்புங்க செல்லங்களே’ என்று பள்ளியெழுச்சி பாடி எழுப்பி காலைக்கடன் அனுப்பி குளிக்க வைத்து அவசர அவசரமாக குளிக்கப்பண்ணி சமைத்து உணவு தீத்தி உடை உடுத்தி பாடசாலை அனுப்பி பிறகும் சாப்பிடாமல் பிள்ளை வந்துவிடுவான்(ள்) என்று அவசரமாக சமைக்கும் அம்மாவை நீங்கள் காணக்கிடைப்பது நீங்கள் செய்த பெரிய புண்ணியத்தின் பலன்.ஆனால் நாங்கள் எல்லாம் அம்மாவை மதிப்பது கிடையாது எங்கள் வாயிற்கு வந்த படி பேசுவோம் வீதியில் ஒரு பெண் அல்லது ஆணை சந்தித்தால் அவரை சந்தித்து மணிக்கணக்கில் பேசுவோம் சாப்பிட எதாவது வாங்கிக் கொடுப்போம் நாங்கள் அம்மாவோடு அதிகம் பேசுவது கிடையாது அம்மாவிற்கு எதாவது விசேடமாக அன்பளிப்புச் செய்வது கிடையாது அம்மா இன்று வயது போய் பழைய அறையில் சோறும் இன்றி சிறுநீர் கழித்தபடி கிடக்கிறாள் ஆனால் நீங்கள் வெளிநாட்டில் உள்ளவருடன் ஸ்கைப்பில் கதைத்த படி இருப்பீர்கள் இப்படித்தான் தமிழர் தாயகத்தில் நிலைமை இருக்கின்றது எங்கள் ஊடகங்களும் அதிகளவில் அம்மாவை பற்றி பேசியது கிடையாது இன்று உங்கள் அம்மாவோடு ஐந்து நிமிடம் பேசி உரையாடி பாருங்கள் எதாவது வாங்கிக் கொடுங்கள் அப்பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியை உங்களிற்கு எந்த பெண்ணோ,ஆணோ தந்து விட முடியாது வாருங்கள் அம்மாவை கொண்டாடுவோம்…..
ஆசிரியர்-14.05.2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *