அரசியல் கைதிகள் விடுதலைக்கு என்ன செய்தார்கள்?

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அரசு அக்கறை எடுப்பதாகத் தெரியவில்லை. நல்லிணக்க அரசு என்று சொல்லி கைதிகள் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதியை வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த வாக்குறுதியை காற்றிலி விட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். எதிர்பார்த்து ஏமாந்த அரசியல் கைதிகளில் 3 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் இருவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சேலைன் ஏற்றப்படுவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவிக்கிறது. மற்ற அரசியல் கைதி தொடர்ந்தும் சிறைக்கூடத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2012 ஆம் ஆண்டு வௌ;வேறு காலப்பகுதியில் இவர்கள் மூவரும் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுறை திருவருள் ஆகியோரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரும் நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஒருவருமே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூவரும் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 16 ஆவது நாளை எட்டியுள்ளது.

தமக்கு எதிரான வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் இருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து கைதிகள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட வரலாறு இலங்கையில் இல்லை. இப்படி இருக்கும் போது சிங்கள அரசை எப்படி நம்பமுடியும். தமிழரசுக் கட்சி இன்னும் நம்புகிறது. இடைக்கால தீர்வை அக்குவேறு ஆணி வேறாக படித்த ஆய்வாளர்கள் தமிழர்களுக்கு எதிரான தீர்வுப் பொதி என்று கூறியிருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது இந்த இறுதி அறிக்கைக்கு உயிர் கொடுக்கும் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒன்றுமேயில்லை என்பது நன்கு தெரியும். தெரிந்தும் சம்பந்தனால் ஒன்றுமே செய்ய முடியாது இருக்கும் போது தொடர்ந்து அரசியல் கதிரையில் இருந்து சுகபோகங்களை அனுபவிப்பதற்காக சிங்கள தலைமையிடம் விலை போயிருக்கிறார். இப்படியாக இருக்கும் சம்பந்தனால் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எப்படி அரசுடன் பேச முடியும். அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தன்னிடம் திறப்பு இல்லை என்று சொன்னவர் தானே சம்பந்தன். பிறகு எப்படி இவரால் தமிழ் மக்கள் விடயத்தில் திறப்பு ஒன்றை வைத்திருப்பார் என்று சொல்ல முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *