அறிவுப்பிச்சைக்காரர்கள்….

தமிழர்களிடத்தே அரசியலில் சுத்த சூனியங்கள் அதிகளவில் உண்டு. ஊடகங்களில் வெளிவரும் அறிக்கைகளையும் அவர்களது உரைகளையும் பார்த்து விட்டு அய்யா… கெட்டிக்காரர் தான் எண்டு நம்மையாக்கள் நினைத்து விடுகிறார்கள். ஆவர் விடும் அறிக்கைகளும்,உரைகளும் யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்தது தான் என்பதை எம்மக்கள் அறிந்தால் கொஞ்சமாவது சிந்திக் தொடங்குவார்கள்.
எங்கள் அரசியல் வாதிகள் ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப ஒவ்வொரு கோணத்தில் இருக்கிறார்களே என்று எங்கள் மக்கள் சிந்திப்பார்கள்  சிந்தித்துவிட்டு  அப்படியே நகர்ந்து விடுவார்கள்.எங்கள் அரசியல்வாதிகள் தங்களது பொக்கற்றுக்களில் படித்த பல்கலைக்கழக மாணவர்களையோ,லெக்சர்மாரையோ,பத்திரிகை ஆசிரியர்களையும்  வைத்துக் கொண்டு தான் இருப்பார்கள். அறிக்கைகளில் விடும் இவர்கள் விடும் அக்கப் போரை மக்கள் பார்த்து விட்டு இவர் எவ்வளவு கெட்டிக்காரர் எண்டு மக்கள் நினைத்து மகிழ்ந்து விடுவார்கள்..
மக்களின் அன்றாட நிலைமைகள் என்ன…? மக்களின் பிரச்சினைகளிற்கான மார்க்கம் என்பது என்ன..? என்பது கூட சிந்திக்கத் தெரியாத அரசியல் உசார் மடைக் கூட்டங்கள் தான் எங்களை ஆளுகின்றன.ஆனால் இவர்கள் மக்களை விற்றுப்பிழைப்பதில் கெட்டிக்கார்கள் வரும் அபிவிருத்தி திட்டங்களில் வரும் கொமிசன்களை ஆட்டயப் போட்டுவிட்டு அம்சடைக்கியாய் இருந்து விடுவார்கள். பின்பு சிங்கள அரசினை எதிர்ப்பது போல் காட்டி தாங்கள் வீரர்கள் என்பதை காட்டிவிடுவார்கள்…
பொதுவாகவே தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழத்தேசியக் கூட்டமைப்பு பாடமாக்கி படித்து வந்த சுயசிந்தனையற்ற புத்திஜீவி மடையர்களையும் படிப்பறிவில்லாத நுணிநாக்கில் இங்கிலிஸ் பேசி ‘ஐசே’ போட்டு பேசும் முதலாளி முட்டாள்களையும்  கொண்டு தான் கூட்டமைப்பே கூத்தடிக்கின்றது இல்லையென்றால் இவர்கள் மெத்தப்படித்த அதிகாரத்திற்கு பயப்படாத மக்களின் குறிப்பாக இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற மக்கள் மயப்பட்ட தலைவரை தோற்கடிக்க முனைந்து தங்கள் அரசியல் வாழ்வை முடிக்க வருவார்களா…. ஒருவேளை இந்தப்பிரேரணை மீளப் பெறப்படாமல் நிறைவேறி இருக்க வேண்டும் சி.வி.கே.முதலமைச்சராகி இருக்க வேண்டும் பிறகு தெரியும் கூட்டமைப்பினதும்,உதயன் பத்திரிகையினதும் குண்டி காய்வதை…..
-ஆசிரியர்-21.06.2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *