அழைப்பு விடுக்கிறார் அங்கஜன்…!

தமிழரசு கட்சி உள்ளிட்ட தமிழ்த்; தேசிய கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளையும் ஒன்று சேர்ந்து கைகோர்க்க முன்வருமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறான பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்…

தற்போது, அரசாங்கத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட 2 கோடி ரூபாய் விடயம் அதிகமாக பேசப்படுகின்றது. தேசிய கொள்கை மற்றும் திட்டமிடல் ஊடாக பிரதமரால் அந்த நிதி வழங்கப்பட்டது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே 2 கோடி ரூபாய் நிதி கொடுக்கப்பட்டது. பொது எதிரணியில் உள்ள 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படவில்லை மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) கொடுக்கவில்லை.

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 16 பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் 2 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக, தமிழத்; தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறாயின், தாமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம் என்பதனை தமிழத்; தேசிய கூட்டமைப்பினர் ஒத்துக்கொள்கின்றார்களா? என்பதை தெரிவிக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு, எதிர்க்கட்சியில் இருந்து மக்களின் உரிமைக்காக போராடுமாறு மக்கள் ஆணை கொடுத்துள்ளார்கள். ஆனால், அரசாங்கத்துடன் இருந்துகொண்டு, இங்குள்ள மக்களுக்கு இன்னொரு முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஏனைய கட்சிகளிடம் வேண்டுகோள் விடுகின்றேன். தமிழ்த்; தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அணியை உருவாக்க வேண்டும்.

அனைவரும் ஒன்று சேர்ந்தால், கிராமங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற முடியும்.

தேர்தல் நிறைவடைவதற்குள் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளையும் தம்முடன் கைகோர்க்குமாறு மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *