இந்திய மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது .

சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிய படகுகள் முலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மினவர்களே அவர்களின் படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

குறித்த மீனவர்கள் இந்தியாவின் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் உதவி கடற்றொழில் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *