இன்னும் என்ன செய்கிறோம்..?


இன்று சனிக்கிழமை பெரும்பாலானவர்களிற்கு விடிந்து விட்டது என்ன செய்யலாம் என்று படுக்கையில் இருந்து சிலர் எழும்பி இருப்பீர்கள் பலர் இன்னும் எழும்பா இரப்பீர்கள் வட,கிழக்கில் உள்ள தமிழர்களிற்கும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிற்கும் இன்றும் நாளையும் தான் வாழ்க்கையை பற்றி கொஞ்சம் என்றாலும் யோசிக்க நேரம் கிடைக்கும் இப்போதாவது கொஞ்சம் யோசியுங்கள் நீங்கள் ஓடி கிழித்த என்ன வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கத் தானே இவ்வளவு காலமும் ஓடினீர்கள் ஓடி என்ன கிழித்தீர்கள் வாழ்க்கை என்பது என்ன நீங்கள் வாழ்வது என்ன என்பது பற்றியெல்லாம் கொஞ்சம் என்றாலும் யோசித்தீர்களா இல்லவே இல்லையே பிறகென்ன வெட்கம் கெட்ட வாழ்க்கை பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா..? மனைவியோடு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா…? உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறதா பிறகென்ன வாழ்ந்து பயன் கடல் கடந்து போய் உழைத்தும் என்ன பிரயோசனம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற வழியைப் பாருங்கள் பிறகு சொத்து சுகம் எல்லாவற்றையும் பற்றி சிந்தித்துக் கொள்ளுங்கள் தமிழர்கள் பொதுவாகவே மிகவும் சீரியஸானவர்கள் வாழ்க்கை வாழாது வரட்டுக் கௌரவம் பார்ப்பவர்கள் வெள்ளைக்காரி கட்டை ஆடையுடன் போனால் அதே போல் நாங்களும் வாழ வேண்டும் யாருக்கும் தெரியாமல் மனதிற்குள் ஆசைப்பட்டு வீணி வடிப்பார்கள் அதே நேரம் வெள்ளைக்காரன் பண்பாடு இல்லாதவன் என்று வெளியால் உரத்தும் பேசுவோம் ஆனால் அவன் வாழும் வாழ்க்கை பற்றி தெரியாது அவன் வாசிக்கும் புத்தகங்கள் பற்றி தெரியாது அவனது அறிவு பற்றி தெரியாது நாங்கள் இன்னும் வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாது என்று தெரியாமல் தான் இருக்கிறோம் இன்னும் நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்…?

-ஆசிரியர்-02.09.2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *