இழுவை படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என இந்தியா உறுதி

கடற்றொழிலுக்காக இழுவை படகுகளை பயன்படுத்துவதற்கான அனுமதிப் பத்திரங்களை இனிமேல் விநியோகிக்காதிருக்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெற்றது.

இதன்போது இழுவை படகுகள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் தௌிவுபடுத்தியிருந்தனர்.

இனிவரும் காலத்தில் இழுவை படுகளுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்காதிருப்பதற்கு இந்திய அதிகாரிகள் இணங்கியதாக இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை கைது செய்வதற்கு இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் இலங்கை அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுகின்ற இந்திய மீனவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதற்கும் இந்த பேச்சுவார்த்தையின்போது இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *