உதயபுரம் துப்பாக்கிச் சூடு மண்டைத் தீவில் தேடுதல்

அரியாலை – உதயபுரத்தில் கடந்த 22 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரிக்க கொழும்பில் இருந்து சென்ற விசேட குழுவினர் நேந்று மண்டைதீவு கடற்படை முகாமிலும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

உதயபுரத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இளைஞனின் மரணத்தின் போது பயணித்த வாகனத்தை மண்டைதீவு கடற்படை முகாமில் கண்டதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் இடம்பெற்றுள்ளது.

கடற்படை முகாமில் வாகனத்தை சோதனை செய்வதற்கான அனுமதி நீதவானிடம் கோரப்பட்டிருந்தது.

அதனை ஏற்று நீதிவான் அனுமதியை வழங்கியிருந்தார்.

அதனடிப்படையில் நேற்று முன்தினம் மாலை திடீரெனப் பயணித்த குழுவினர் கடற்படை முகாமில் அவ்வாறான வாகனம் ஏதும் உள்ளதா என்பதனை தேடி அலசியுள்ளனர்.

இருப்பினும், இவ்வாறு தேடுதல் மேற்கொண்ட குழுவினருக்கு எந்தவொரு தடயமும் கிடைக்காதமையினால் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அந்த குழுவினர் தொடர்ந்தும் பல கோணங்களில் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *