கடற்படையின் காணி திருட்டு: தற்காலிக நிறுத்தம்

ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை கடற்படையின் தமது தேவைக்கு சுவீக்க எடுத்த நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பருத்தியடைப்பு பகுதியிலுள்ள கடற்படை முகாமை விஸ்தரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கடற்படை முகாமை அண்டிய தமது குடியிருப்புக்கள் இருந்தும் கடற்படை முகாம் அமைந்துள்ள காரணத்தால் அச்சமான மன நிலை காணப்படுவதாகவும், பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் உள்ள அச்சம் காரணமாகவும் வேற்று நபர்களின் காணிகளில் குடியிருப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்
மக்களின் எதிர்ப்பினை அடுத்தும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்தும் காணி அளவீடுகள் தற்காலிகமாக தேர்தல் நிறைவடையும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *