காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏமாற்றம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த ஜனாதிபதி வாகனமும் பொலிஸ் பாதுகாப்பும் தருகிறேன் எங்கே காணாமல்ஆக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் அங்கே போய் பாருங்கள் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வுகளில் கலந்து விட்டு கிளிநொச்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதன் போது கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து பேசினார். இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இரகசிய தடுப்பு முகாம்களில் உயிருடன் இருக்கிறார்கள் என்று ஜனாதிபதியிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்த போது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேலும் கவலையடைந்துள்ளனர். அதாவது ஜனாதிபதி இந்த விடயத்தை கையிலெடுத்து தமக்கு தீர்வொன்றினைப் பெற்றுத் தருவார் என்று நம்பிய உறவினர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *