காணாமல் ஆக்கப்பட்ட கணவரையும் மகனையும் தேடி அலைந்த பெண் மாரடைப்பால் உயிழந்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரையும் மகனையும் தேடி அலைந்து திரிந்த தாய் நேற்று உயிரிழந்துள்ளார். மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த ஜெசிந்தா பீரிஸ் (வயது 55) என்பவரே மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கணவர் அமலன் லியோன் மகன் ரொசான்லி லியோன் காணாமல் போனார்கள். இவர்களை 10 வருடங்களாக தேடி வந்துள்ளார் ஜெசிந்தா பீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கணவர் மகன் காணாமல் போன விரக்தியில் மனதளவில் பெரிதும் பாதிப்பினை எதிர்கொண்டிருந்தார். இதன் விளைவே மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் கடற்படையின் இரகசிய முகாமில் கண்டெடுக்கப்பட்ட 12 அடையாள அட்டைகள் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட கணவரதும் மகனதும் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்குகளுக்காக இவர் அடிக்கடி கொழும்பு சென்று வந்துள்ளார்.

பல வருடங்களாக வழக்குகளுக்காக கொழும்பு சென்று வந்தவர் நேற்று அதிகாலை யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிழந்துள்ளார்.

இவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பேராட்டங்களில் கலந்து கொண்டு தனது கணவரையும் மகனையும் மீட்டு தருமாறு அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *