கூட்டமைப்பு கைப்பற்றும் -சித்தர் நம்பிக்கை…?

தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வெளியான இடைக்கால அறிக்கை குறித்தும், இரண்டு கோடி ரூபா விவகாரம் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். நாங்கள் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத தமிழ் மக்களிற்கு பாதகமான தீர்வினை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
சர்வேதசத்தில் இருந்து இங்கு வருகை தரும் அதிகாரிகள் தீர்வு முயற்சிகளை குழப்பி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *