கொள்கையும் தமிழர்களும்….


தமிழர்களின் பேச்சு வழக்கில் அடிக்கடி ஒரு சொற்றொடர் புழக்கத்தில் இருக்கும் ‘இவன்(ள்) கொள்கையில்லாதவன்(ள்) இது அடிக்கடி பயன்பாட்டில் இருக்கும் கொள்கை பற்றி அதிகம் பேசித்திரியும் தமிழர்களாகிய எங்களிடம் இருந்து கொள்கை மீறல்கள் அதிகளவில் இருக்கின்றது. தமிழர்கள் சகோதர இஸ்லாமிய அரசியல்வாதிகளை பற்றி ‘ஆளுகின்ற பக்கம் ஒட்டிக் கொள்ளுவார்கள்’ என்ற காட்டமாகத் தெறிக்கும் விமர்சனம் பாமர மட்டத்திலும் உண்டு ஆனால் எங்கள் தமிழ் அரசியல் வாதிகள் மேடைகளில் அனல் தெறிக்க கொள்கை பற்றி முழங்குவார்கள் ஆனால் தேர்தல் முடிந்த பின்பு இவர்களினை மக்களிடத்தே காணக்கிடைப்பதில்லை கொள்கை பற்றி பேசிய இவர்கள் கொழும்பில் உள்ள ஆளும் தரப்பினருடன் ஒன்றாக அமர்ந்து வைன் அருந்திக் கொண்டு இருப்பார்கள் இது தான் யதார்த்த உண்மையாக இருக்கும். தமிழர் தரப்பின் எதிர் தரப்பினராக கருதி பெரும்பாலான தமிழ் மக்கள் வாக்களிக்கத் தவறுகின்ற அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா தரப்பிடம் தங்களிற்கு தங்கள் பிள்ளைகளிற்கு வேலை என்றவுடன் காலில் விழுந்து அவர்களின் காலினை நக்கியாவது வேலை வாங்கிவிடும் எம்மக்கள் பிறகு தமிழ்த் தேசியம் பேசுவார்கள்… தங்களது காரியம் முடியும் என்றால் உரியவரின் குண்டியையும் கழுவி விடும் நாங்கள் கொள்கை பற்றி பேசுவது மிகக் கேவலமானது… அண்மைய காலங்களில் ‘விசுவாசம்’, ‘கொள்கை’ என்ற சொல்லாடலை வைத்து யாழ்ப்பாணத்தின் பிரபல எம்.பி. ஒருவர் இளைஞர்களின் மண்டைகளை கழுவித் திரிவதாக தகவல் வெளியாகி உள்ளது வேலை செய்தால் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யுமாறும் அப்படி வேலை செய்தால் தான் எல்லாம் கிடைக்கும் என்று கதையழந்து திரிகிறார் இப்படி பேசித் திரியும் இவர் எப்படி பணம் சேர்த்து தன்னுடைய தொழில்களை நகர்த்துகிறார் என்று யாழ்ப்பாணத்தில் எவரிற்கும் தெரியாத ஒன்றல்ல…. இவர்கள் போன்று தங்களுடைய சேப்டிக்காக ‘கொள்கை’ பேசும் இவர்கள் மக்களிற்கு தெரியாமல் ‘கொழும்பில் செய்யும் அண்டர் கிரவுண்ட் டீலிங்’ எல்லாம் எதிர்காலத்தின் ஆசிரியர் பீடம் தெரியாத ஒன்றல்ல… எங்களுடைய நோக்கம் யாரையும் புண்படுத்துவதல்ல கொள்கை பேசித் திரியும் எம் மக்கள் கொள்கையில் நிலையாக நிற்க வேண்டும் சந்தர்ப்பத்திற்கேற்ப ‘பல்டி’ அடிப்பவர்கள் கொள்கை என்ற நாமத்தையே உச்சரிக்கக்கூடாது என்பது தான் எமது அவா……
-ஆசிரியர்-25.05.2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *