சர்வதேச வெள்ளை பிரம்பு தினம் இன்று

சர்வதேச வெள்ளை பிரம்பு தினம் இன்றாகும்.
இதனை;முன்னிட்டு இன்று காலை 10 மணியளவில கொழும்பு பொது நூலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் வைபவம் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் எபர்ணான்டோ பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். தெரிவு செய்யப்பட்ட விழிப்புலனற்ற பயனாளிகளுக்கு இலவசமாக வானொலி பெட்டி, பேசும் கடிகாரம், நிதியுதவி, வீடமைப்பு உதவி என்பன வழஙகப்பட உள்ளன.
இலங்கையில் விழிப்புலனற்றோர் மற்றும் விழிப்புலன் குறைந்தோருக்கு சேவையாற்றி வரும் பழைமை வாய்ந்த அமைப்பான இலங்கை விழிப்புலனற்றோர் சேவை சபை, இதனை ஒழுங்கு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *