ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை மீதான விசாரணை எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த விசாரணைகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6, 7 மற்றும் 17 ஆம் திகதிகளில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய குறிப்பிட்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் உள்ளிட்ட 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *