நாங்களும் மரங்களும்…


நேற்றைய தினம் உலக சுற்றாடல் தினம் எம்மை கடந்து போய் இருக்கின்றது.இதைப்பற்றி பலர் அறிந்திருக்க மாட்டோம்.எங்களிற்கு அதைப்பற்றி கவலை கிடையாது.இம்முறை உலக சுற்றாடல் தினத்தை இயற்கை இலங்கைக்கு முகத்தில் செருப்பால் அடித்தது போல் நினைவு கூறி இருக்கின்றது.தென்னிலங்கை மற்றும் மலைநாட்டுப்பக்கம் அதிகமான மழைவீழ்ச்சி வடக்கில் தொடர் வரட்சி இதெல்லாம் இயற்கையை பற்றி நாங்கள் நினைத்துப்பார்க்காமல் இருந்ததன் விளைவு தான்… அபிவிருத்தி கண்டு வரும் நாடாக இருந்து வரும் இலங்கை அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது இயற்கையை பற்றி சிறிதும் அலற்றிக் கொள்வது மனிதன் தனக்காக என்று இயற்கையை மாற்றி அமைக்கத் தொடங்கினானோ அன்று முதல் இயற்கையும் மனிதனுக்கு எதிராக போராட்டத்தை கையில் எடுக்கத் தொடங்கியது. இயற்கை முழுமையாக மாற்றி அமைக்கப்படும் பொழுது இயற்கை தனது நிலைமையை சீரமைக்க தனது விளையாட்டை ஆரம்பிக்க வேண்டி இருக்கும். தொடர் வரட்சியில் இருக்கும் வட,கிழக்கில் ஒரு துளியளவு மழை கூட இல்லாத நிலையில் தென்னிலங்கை பக்கம் பெரும் அளவில் மழை கொட்டித் தீர்க்கின்றது. இயற்கை இப்படித்தான் தன் மீது கை வைத்தால் அது எல்லோர் மீதும் கை வைக்க ஆரம்பிக்கும். வட,கிழக்கில் உள்ள மரங்களை வீடுகளில் வைக்கின்றோமா எனக் கேட்டால் இல்லை என்;று தான் சொல்ல வேண்டும் மரங்கள் என்று நாங்கள் சொல்லும் போது அலகு மிகு குரோட்டனை தான் வைப்போம் மரம் நடுவது நாங்கள் பழக வேண்டிய ஒன்று….
-ஆசிரியர்-06.05.2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *