படிப்பும் நாங்களும்…

தமிழிலே ‘நாடு ஒரு புறம் போகிறது ஏடு ஒரு புறம் போகிறது’ என்ற பழமொழி ஒன்று உண்டு. எங்கள் கல்விச் சாலைகளில் படிக்கும் மாணவர்கள் ‘புத்தகப்பூச்சிகள்’, ‘போட்டோ பிரதி இயந்திரங்கள்’ ஆசிரியர்கள் கொடுக்கும் பாடத்தை அப்படியே ஒரு எழுத்தைக் கூட விடாமல் பாடமாக்கி எழுதி ஒப்புவிப்பதில் வல்லவர்கள் இவர்களிடம் விமர்சன ரீதியான பார்வை,ஆழ்ந்த அறிவு,சிந்தனை என்பவை கிடையாது… மாணவர்களிடம் பாடப்புத்தகங்களை பாடமாக்குவதனை விட பத்திரிகை வாசித்தல்,செய்திகளை அறிதல் இலக்கியங்களை வாசித்தல்,புத்தகங்கள் வாசித்தல் போன்ற நல்ல பழக்கங்களை காணக்கிடைப்பது அரிது.. மாணவர்களினை புத்தகக்கடைகளில் புத்தகங்கள் வாங்கும் காட்சியை காண்பது அரிது… மாணவர்கள் தங்கள் பாடங்களின் கடந்த கால வினாப்பத்திரங்களையும்,பாட வழிகாட்டல் துணை நூல்களை மட்டுமே வாசிக்கின்றனர்… பிள்ளைகளை இவ்வாறு பெற்றோர்கள் வாசிக்கத் தூண்டுவது கிடையாது… அம்மா பிள்ளை பத்திரிகை விற்பவர்களிடம் பத்திரிகை அல்லது சஞ்சிகைகள் வாங்கித் தர கேட்டால் கூட பிள்ளை படிக்காது என்று சொல்லும் மறுக்கும் காட்சிகளையும் அதே அம்மா முகக்களிம்புகளையும்,கட்டைப்பாவாடையையும் பிள்ளை முன் வாங்கும் காட்சிகளையும் தமிழர் தாயகத்தில் நேரடியாக பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்… பிள்ளையிடம் வாசிப்பு மட்டம் அதிகரிக்குமானால் பிள்ளை வாத்தியாரிற்கு பாடம் எடுக்கும் என்ற உண்மை பெற்றோரிற்கு தெரியாமல் போனது இங்கு வேடிக்கை… பிள்ளையிற்கு ஏட்டை பற்றி அறிவதற்கு முன் நாட்டை பற்றிய அறிவு அவசியம்… நாட்டை பற்றிய அறிவிற்கு ஒரு பிள்ளையிற்கு விஞ்ஞானபூர்வமாக ஏற்படுமானால் அந்தப்பிள்ளை எந்தத் துறையிலும் சாதித்து விடும்… வாசித்தல் என்பது தனியான கலை ஒரு விடயத்தை நேரடியாக பார்ப்பதற்கும,; அக்காட்சியை வாசித்து கற்பனை மூலமாக காண்பதற்கும் இடையிலான உளவியல் களிப்பு மிகவும் வித்தியாசமானது… வாழ்வு சிறக்க வாசிப்போம் உலகையும்,நாட்டையும்,சக மனிதர்களையும்…. ‘வாசிப்பவன் கெட்டதில்லை நண்பரகளே வாசிப்பவனிடம் தான் ஆளுமை,நெஞ்சுறுதி பிறக்கின்றது என்பதை மறக்காதீர்கள் இதற்கு நல்ல உதாரணம் தோழர்.சேகுவேரா மற்றையவர் தோழர்.வே.பிரபாகரன்…வாசிப்போம் தோழர்களே வானம் வசப்படட்டும்….
-ஆசிரியர்-10.06.2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *