பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் நிறைவு விழா

2017 அகில இலங்கை பாடசாலைகளுக்கு  இடையிலான விளையாட்டு போட்டியின் நிறைவு விழா தியகம சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
 கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்கின்றார். கல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டுப் போட்டியில் 29 போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
 முதலாம் நாளன்று நடைபெற்ற நீளம் பாய்தல் போட்டியில் 5.66 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்ற அவர்இ 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 12.67 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் சானுக்க சந்தீப்ப (10.89 செக்.) தங்கப் பதக்கத்தையும்இ நிக்கவெரெட்டிய அன்புக்குளம் முஸ்லிம் மகா வித்தி யாலயத்தின் ஏ.எஸ்.எம். சப்ரான் (10.96 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
 விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் வட மாகாண பாடசாலைகளுக்கு 4 தங்கப் பதக்கங்கள் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் ஒரு வெண்கலம் உட்பட 7 பதக்கங்கள் கிடைத்தன. 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சந்திரகுமாரன் ஹெரீனா 1.58 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை வென்றார். இந்தப் பிரிவில் ஈட்டி எறிதலில் 37.33 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த சாவகச்சேரி இந்து கல்லூரியின் சந்திரசேகரன் சங்கவி தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொண்டார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரியின் பவானந்தன் சாத்விகா 3.00 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தையும்  இதே பிரிவில் சாவகச்சேரி இந்து கல்லூரியின் பாலசுப்பிரமணியம் கிரிஜா 2.85 மீற்றர் உயரத.தை பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரியின் நெப்தலி ஜொய்சன் (4.40 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும்இ தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் எஸ். டிலக்ஷன் (4.20 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதல் போட்டியில் இமயானன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் எம். சிவசயன் 47.89 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெள்ளிப் பதக்கதை கைப்பற்றினார்.
 7 பேர் கொண்ட றக்பி, மற்றும் கரையோர கரப்பந்தாட்டப் போட்டிகளும் இதில் அடங்குகின்றன. கடந்த 2ம் திகதி முதல் கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள மைதானங்களில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *