பாற்சோறிற்காய் திரியும் பரதேசிகளா நாங்கள்….?

பாற்சோறிற்காய் திரியும் பரதேசிகளா நாங்கள்….?
வணக்கம் வாசக நெஞ்சங்களே இன்று எமக்கு ஐந்தாவது நாள் ஆனால் தமிழர் தாயகத்திற்கு இன்று ஒரு முக்கியமான நாள் தமிழர் தாயகத்தில் நந்திக்கடல் இரத்தக்கடலாக மாறிய நாள் பெரும் ஓர்மமும் அர்ப்பணிப்பும்,கணக்கிலில்லா உயிர்களையும் பலி கொடுத்து நடாத்தப்பட்ட போர்உலக முதலாளித்துவ வல்லாதிக்கத்தினால் தோற்கடிக்கப்பட்ட, சுயநலம் என்றால் என்னவென்று தெரியாமல் தனது பிள்ளைகளையும் போராட்டத்திற்கு கொடுத்த தமிழர்களின் முதலும் கடைசியுமான தலைவர் அதிமேதகு தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பற்கள் பிடிங்கப்பட்ட அதே வேளை சிலபேரின் சுயநலம் வென்ற நாள்… ஆனால் இதுவெல்லாம் நாங்கள் எத்தனை பேர் அறிகிறோம் எங்கள் இனத்தை கொன்றொழித்த இராணுவத்தின் கைகளால் வெசாக்கிற்கு உள்ளாடை தெரிய கட்டைப்பாவடை அணிந்து சென்று பாற்சோறும் அப்பிளும் சாப்பிட்டு வந்தோம் வெசாக் காட்சிகளை படமெடுத்தோம் புத்தரோடு நின்று செல்பி எடுத்தோம் இராணுவத்துடன் கதைத்தோம் தொலைபேசி இலக்கம் கொடுத்தோம் இது தான் இன்றைய நாளின் காட்சி…ஒரு இனம் மாண்டு போகின்றது ஒரு பக்கம் 18 நாடுகள் ஒரு சேர அடிக்கின்றன… இரத்த ஆறு ஓடுகிறது… சிறு குழந்தைகள் செல் விழுந்த காயங்களுடன் பாலிற்காய் குண்டால் அறுந்து கிடக்கும் அம்மாவின் முலையை வாய் வைத்து பொச்சடிக்கின்றன…. ஆனால் யாழ்ப்பாணத்தில் லைட் இன்ஜினில் கிரிக்கட் மெட்ஜ் ஓடுகிறது…நல்லூரில் ஆர்ப்பாட்டமோ உண்ணாவிரதமோ இடம்பெறவில்லை…முகப்புத்தக வீரர்கள் அப்பொழுது அம்மாவின் மடிகளிற்குள் தஞ்சம் அடைந்திருந்தார்கள்…வெளியே வந்தால் இராணுவம் அள்ளிவிடும்…. இது தான் நிலைமை ஓர் இனம் அழியும் அந்த இனம் கண்டு கொள்ளாமல் விட்ட பெரும் பிழையான வரலாறு ஒன்று உண்டு என்றால் அது தமிழ் இனத்திற்கு தான் உண்டு……
-ஆசிரியர்-18.05.2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *