யாழ்.பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது

யாழ்.பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது. கேட்பதற்கு ஆட்களே இல்லையா. படித்த முட்டாள் என்று சொல்வது இதைத்தானா. நிர்வாகத்தில் பிரச்சினை பீடாதிபதிகளினால் பிரச்சினை. மாணவர்களால் பிரச்சினை என்று கல்வியை மேம்படுத்த நேரமேயில்லை போலும். கையைப் பிடித்து இழுத்தார் என்று ஒரு பிரச்சினை வந்து மறைவதற்குள் நவராத்திரி பூசையில் கரடி புகுந்த பிரச்சினை பெரும் பிரச்சினையாக போய்விட்டது.

ஒரு நாள் முதல்வர் என்று சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தை பார்த்திருக்கிறோம். அரை நாள் பீடாதிபதி என்று யாழ் பல்கலைக்கழகத்தில் பதவியேற்ற புதுமையை பார்த்திருக்கிறியளா? முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக வருபவர் அதிரடியாக செயற்பட்டு நிர்வாக சீர்கேடு தொடக்கம் இலஞ்ச ஊழல்; வரை விசாரணைக்கு எடுத்து தண்டணை வழங்குகின்றார். இங்கே ஒரு நாள் அல்ல அரை நாள் பீடாதிபதியாக வருபவர் செய்த ஒரு பெரிய செயல் என்றால் நவராத்திரி பூசையில் கும்பம் சரிப்பது இறுதி நாளாகும். பல்கலைகழகத்தில் முதல் நாளே கும்பத்தை எடுக்குமாறு அரை நாள் பீடாதிபதியாக பதவியேற்ற அன்றே உத்தரவிட்ட கெட்டிக்கார பெண் பீடாதிபதி வரலாற்றில் இவர் மட்டும் தான் இருக்க முடியும்.
வடக்கில் இன்று கல்வி கடைசி இடத்தில் இருக்கிறது. படிக்கும் போது சமூகத்துடன் கல்வியை ஒத்து படிக்கும் போது கல்வி மேலோங்கும். தனிய கல்வியை மட்டும் படிப்பதால் சமூகத்தில் ஒன்றும் நிகழ்ந்து விடாது. பல்கலைக்கழகத்தில் படித்து வெளியேறும் மாணவர்கள் தமது மூளையை வளர்த்துக் கொண்டு வெளியேறுகின்றார்கள் என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு இப்படிப்பட்ட பீடாதிபதிகளும் காரணமாக விளங்குகின்றார்கள்.

தகுதி உடையவர்களுக்கு இடமில்லை என்று இன்றைய தலைமுறை சொல்லும் காலம் வந்துவிட்டது. பல்கலைக்கழகத்திற்கு சென்று விட்டால் வாழ்க்கையில் ஏதோ சாதித்துவிட்டதாக நினைக்கிறார்கள். அப்படியல்ல பல்கலைக்கழகம் ஒவ்வொருவரின் திறமையை பரிசோதித்து பார்க்கின்ற இடமாகும். ஒழுங்கான முறையில் பரிசோதிக்கவில்லை என்றால் இந்த பீடாதிபதி போல் செயற்படத்தான் தோன்றும். நவராத்திரி விரதம் பற்றி ஆரம்ப பாடசாலையில் புரியும் படி படிக்காத காரணத்தால் தான் இன்று இந்த நிலைமை.
கல்வி பின்னுக்கு மருத்துவம் பின்னுக்கு என்று பின்னுக்கே சென்று கொண்டிருக்கும் இன்றைய காலப் பகுதியில் ஆரம்ப பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகம் வரை ஒழுங்காக பாடத்தை புரிந்து படிக்காத காரணத்தால் தான் இன்று இந்த அரை நேர பீடாதிபதிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அரை நேர பீடாதிபதிக்கே இந்த குழறுபடி என்றால் நிரந்தர பீடாதிபதிக்கு எப்படி இருக்கும் என்ன பாடுபடுமோ பல்கலைக்கழகம்.

நவராத்திரி வழிபாட்டையே ஒழுங்காக செய்ய முடியாமல் குழப்பும் எண்ணம் கொண்ட இவரால் எப்படி நம்பி நிரந்தர பீடாதிபதியாக நியமனம் வழங்க முடியும். ஆனால் இவருக்கு வழங்கினாலும் வியப்பில்லை ஏனென்றால் இவரைப் போல் தான் பீடாதிபதிகள் தொடக்கம் விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் வரை இருக்கிறார்கள்.

இப்படி இருக்கும் போது எப்படி பல்கலைக்கழகம் முன்னேறும். பின்னேறித்தான் செல்லும். கைலாசபதி இருந்த காலம் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த வரம் அவர் இறந்த நாளிலேயே போய்விட்டது. இன்று வரைக்கும் அவரைப் போல் ஒருவரை பல்கலைக்கழகம் காணவில்லை என்பது கல்விச் சமூகத்துக்கு கிடைத்த தோல்வியாகும். இவரைப் பார்த்து தாமும் முன்னுக்கு வர வேண்டும் என்று எவரும் நினைப்பதில்லை. ஏனென்றால் இன்றைய காலம் அறிவு மங்கிய காலம். இந்தக் காலத்தில் பல்கலைக்கழகத்தில் யார் வந்தாலும் அவர்களின் திறமை பெரிய சக்தியாக உருவெடுக்க வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *