யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவர்களை நீதியின் முன் நிறுத்தவும்

யாழ். போதனா வைத்தியசாலையில் என்ன நடக்கிறது. ஒழுங்கான சிகிச்சை இல்லை இதனால் பலர் சந்தேகத்திடமாக சாகிறார்கள் சிகிச்சைக்கான இயந்திரமில்லை இதனால் வெளியில் பரிசோதனைகளை செய்யுமாறு கூறுகிறார்கள். இப்படியாக மருத்துவ சேவையில் தரம் குறைந்திருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலையை சிஙகப்பூர் தரத்தில் ஏன் கட்டடத்துக்கு பெரும் தொகை பணம் செலவு செய்யப்பட்டது போன்ற கேள்விகளுக்கு இன்றும் பதில்கள் வெளிவரவில்லை.

இந்த வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரியாக இருக்கும் உதயசிறியாள் வைத்தியசாலைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. என்பது சாதாரணமாக பார்க்க வேண்டியவிடயமல்ல. யாழ்.போதனா வைத்தியசாலை மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மை நிலை வெளிக்கொணரப்பட வேண்டும். இல்லை என்றால் அன்று போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட இந்த வைததியசாலையில் சாவடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பது உண்மை.
பணிப்பாளர் மருத்துவர்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்காத படியால் தான் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்றனர். ஏனெனில் தனியார் மருத்துவமனையில் கூடுதலான பணத்தை சம்பாதிக்க முடியும். யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் நோயாளரை கண்கொண்டு பார்க்க மருத்துவர் இல்லை. இந்த நிலைமை இருக்கும் போது இந்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படும் நோயாளர்கள் சாவடையமாட்டார்கள் என்று நம்பிக்கையாக சொல்ல முடியும்.
தமிழ் தாயின் பால் குடித்து வளர்ந்த பிள்ளை தனது தாய் மண் மீதும் மக்கள் மீதும் பற்றுக் கொண்டிருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் தான் ஆனால் பணத்துக்காக இரவு பகலாக ஓடும் மருத்துவர் மருத்துவத் தொழிலில் இருந்து தன்னை வளர்த்துக் கொள்ள முடியாமலும் நோயாளிக்கு நோயை அறிந்து சிகிச்சை செய்ய முடியாமலும் போய்விடும் என்பது மருத்துவ சமூகத்துக்கு கிடைத்த பெரு வீழ்ச்சியாகும்.
பணத்தை மட்டும் ஈட்டுவதில் குறியாக இருக்கும் ஒரு மருத்துவர் நோயாளியிடம் பேசும் போது இப்படியாகப் பேசுவார் அதாவது என்ன வேலை பார்க்கின்றீர்? பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனரா? போன்ற கேள்விகளைக் கேட்டுவிட்டு அவர்கள் சொல்லும் பதில் எப்படி இருக்கிறதோ அதற்குப் பிறகு தான் சிகிச்சை செய்ய முற்படுவார்கள் அதாவது நோயாளி பண வசதி படைத்தவர் என்பதை அறிந்த பின்னர் தான் நோயாளிக்கு சிகிச்சை செய்ய முன்னிற்பர். பணமில்லாத நோயாளியை பனடோலுடன் மட்டும் சிகிச்சை செயவர். இப்படியாக கேவலமான நிலைமை மருத்துவர்களிடம் காணப்படுகிறது.

பண வசதி படைத்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு போகாமல் தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். பாவம் பண வசதி படைக்காதவர்கள் இந்த வைத்தியாசாலைக்குச் சென்று அவஸ்தைப்படுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் தான் அதிக நேரம் மருத்துவர்கள் நிற்கிறார்கள். ஆனால் யாழ்.போதனா வைத்தியசாலையில் நிற்பதாகக் கூறி மேலதிக வேலை நாளுக்குரிய பணத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

மருத்துவர் இல்லாத நேரம் எத்தனை நோயாளர்கள் சாவடைகிறார்கள் என்று பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். சாவடைந்த நோயாளரை உறவினர்கள் எடுத்துச் செல்ல விடமாட்டார்கள் மருத்துவர் வந்து பார்த்த பின்னர் தான் சாவடைந்தவரின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிப்பார்கள். சாவடைவதற்கு முதல் எல்லோ நோளாளரை மருத்துவர் பார்க்க வேண்டும் அப்படி பார்க்காமல் சாவடைந்த பின்னர் உடலை பார்ப்பதற்கு மருத்துவர் வருவார் என்று சொல்வது எவ்வளவு அவர்களின் மருத்துவ தொழிலுக்கே இழுக்கான செயலாகும்.

இதனால் தான் தனியார் மருத்துவக் கல்லூரி வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரி வந்தால் தான் பல மருத்துவர்கள் உருவாவார்கள் அவர்கள் எங்கும் ஓடாமல் ஒரு சீற்றில் இருப்பார்கள். அப்படி உருவாகும் மருத்துவர் எந்த நேரமும் தங்களை பார்க்கும் போது மக்கள் தமது நோய்களை குணப்படுத்த முடியும் என்று நம்புகின்றார்கள். மக்களின் நோயை குணப்படுத்த தனியார் மருத்துவக் கல்லூரி வரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *