வடக்கில் கடை விரிக்கும் தென்னிலங்கை…?


வடக்கில் தென்னிலங்கை கட்சிகள் கடை விரிக்க ஆரம்பித்து விட்டன, முதலாளித்துவ கட்சிகள், முதலாளித்துவம் இல்லையென்று சொல்லி முதலாளித்துவத்திற்கு குடை பிடிக்கும் ஜே.வி.பி உட்பட்ட கட்சிகள் வடக்கில் இறங்கி தொழிற்பட ஆரம்பித்து விட்டன. தேர்தலை எதிர்கொள்ள இப்பொழுதே தயாராகி வருகின்றன. தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடைக்கால அறிக்கையில் பிஸியாக இருப்பதைப் போல காட்டி விட்டு தத்தமது வீடுகளை கட்டும் அலுவல்களில் திரிகின்றனர். தேர்தல்களிற்கு ஆட்களை இறக்குவது குறித்து எவ்வித அசுமாத்தத்தையும் காணோம்.. ஒரு புறம் பசில் டக்ளசோடு ஒட்டியிருந்தவர்களை காசு கொடுத்து வாங்கி களமாற்றத் தொடங்கி விட்டார். சுதந்திரக்கட்சிக்கு வரும் சீட்டுகளை எட்டிப் பிடிப்பது, இல்லை இல்லாமல் பண்ணுவது இது தான் அவரது நோக்கம் அதற்காக இறங்கி வேலை செய்யத் தொடங்கிவிட்டார். இன்று ஜே.வி.பி. ஊடகவியலாளர்கள் மாநாட்டை நடாத்தியது அதில் ரில்வின் சில்வா தங்களது கட்சியிடம் இறங்கி எலெக்சன் கேளுங்கள் என்று பகிரங்கமாகவே பேசத் தொடங்கி விட்டார். ஒரு காலத்தில் தமிழ் மக்களின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டவர்கள் தாங்கள் என்று தெரிந்தும் மக்களை மாற்றலாம் என்பதை அறிந்து களமாடுகிறார்கள் ஆனால் கூட்டமைப்பு பொத்திக் கொண்டு இருக்கிறது. இது குறித்து அரசியல் ஆய்வாளர் சகோதரர் யதீந்திரா தினக்குரலில் எழுதியுள்ளார் அதாவது கூட்டமைப்பு வேட்பாளர்களை தென்னிலங்கை கட்சிகளைப் போல் நேர்முகத் தேர்வு வைத்து தெரிவு செய்வதில்லை மாறாக இறுதி நேரத்தில் மாட்டுப்படும் சகல அடி மொக்கர்களையும் தெரிவு செய்கிறது ஆதலால் ஒரு அரசியல் வரைபை கூட வாசித்து விளங்க முடியாதவர்களாக கதிரைக்கு வருபவர்கள் இருக்கிறார்கள் கூட்டமைப்பு விளக்குமாத்தை நிறுத்தினால் கூட வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்பில் இருக்காமல் படித்த உணர்வுள்ள சிந்தனையுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட கூட்டத்தை வேட்பாளர்களாக்க சிந்திக்க வேண்டும் இல்லையேல் கடைசிக் கழிவுகளைக் கொண்டு தான் வாழ்நாள் முழுவதும் மக்களை சிதைக்க வேண்டி வரும்…
-ஆசிரியர்- 09.10.2017.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *