வந்தது ரயில்…

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரையானப் பயணத்தை ஆரம்பித்துள்ள நிலக்கரி ரயில் (கரிகோச்சி), நானுஓயா புகையிரத நிலையத்தை, நேற்று  (30) வந்தடைந்தது.

ஜேர்மன், அவுஸ்திரேலியா, லண்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சுற்றுலா பயணிகளுடனேயே, இந்த ரயில் நானுஓயாவை வந்தடைந்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து, கடந்தத் திங்கட்கிழமை (29) தனதுப் பயணத்தை ஆரம்பித்த இந்த ரயில், கண்டி புகையிரத நிலையத்தில், திங்கட்கிழமை (29) தரித்து நின்றதுடன்,  நானுஓயா புகையிரத நிலையத்தை வந்தடைந்தது.

இறுதியாகக் கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி, இந்த நிலக்கரி ரயிலானது, பண்டாரவளை வரை தனதுப் பயணத்தை மேற்கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

ஹட்டன் புகையிரத நிலையத்தில் சிறிது நேரம் தரித்து நின்ற ரயிலை, பெருந்திரளான மக்கள் பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *